வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
உலகம்

2028 அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குகிறாரா ஜே.டி. வான்ஸ்?

2028 அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்குகிறாரா ஜே.டி. வான்ஸ்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஈரான் போர் முக்கியக் காரணம் என வான்ஸ் கருத்து தெரிவித்திருப்பது அமெரிக்க அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

ஈரான் போர் தொடர்பாக வான்ஸ் தெரிவித்த கருத்துகள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ட்ரம்புடனான அரசியல் சூழலும், குடியரசுக் கட்சியின் தற்போதைய நிலையும் வான்ஸின் அடுத்தகட்ட முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில், 2028 அதிபர் தேர்தலில் களமிறங்கும் தனது திட்டம் குறித்து இறுதி முடிவெடுப்பதை அவர் தள்ளிவைக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அவர் முழுமையாகக் கைவிட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.