4 பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 75% ஆகக் குறைக்கத் திட்டமா?

இந்தியாவில் நான்கு பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளை 75 சதவீதமாகக் குறைப்பது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஓராண்டுக்குள் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்தத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இறுதி முடிவுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.




கருத்துகள் (0)