மொபைல் டேட்டா வேண்டாமா? ஏர்டெல் அறிமுகப்படுத்திய 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தாமல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய பிரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.185 திட்டத்தில் 28 நாட்களும், ரூ.203 திட்டத்தில் 30 நாட்களும், ரூ.206 திட்டத்தில் ஒரு காலண்டர் மாதமும் வேலிடிட்டி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மூன்று திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இலவச ஹலோ டியூன்ஸ் வசதியும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. டேட்டா தேவையில்லாமல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்துவோருக்கு இத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், ரீசார்ஜ் செய்வதற்கு முன் தங்கள் வட்டாரத்தில் திட்டங்கள் கிடைக்கிறதா, தற்போதைய சலுகைகள் என்ன என்பதைக் ஏர்டெல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்ப்பது நல்லது.




கருத்துகள் (0)