வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

6 மாதங்களில் 10,000 புதிய காவலர்கள் நியமனம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

6 மாதங்களில் 10,000 புதிய காவலர்கள் நியமனம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதையும் காவல்துறையின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர். நிர்மல்குமார், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 19,000 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 6,700 போக்சோ வழக்குகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் தொடர்புடைய பெரும்பாலானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார். காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.