A2B நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் போதி ட்ரீ.. ரூ.1,500 கோடிக்கு ஒப்பந்தம்!

தென்னிந்தியாவின் பிரபல உணவக நிறுவனங்களில் ஒன்றான அடையாறு ஆனந்த பவன் (A2B), தற்போது தனது உரிமை அமைப்பில் முக்கிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக உணவுத் துறையில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை, ஜேம்ஸ் மர்டோக் மற்றும் உதய் சங்கர் நிர்வகிக்கும் போதி ட்ரீ (Bodhi Tree) நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500 கோடி செலவிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் தனது உணவகச் சேவையை விரிவுபடுத்தியுள்ள A2B நிறுவனம், இந்தியாவில் மட்டும் 160 கிளைகளைக் கொண்டுள்ளது. இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் 30 கிளைகளை நடத்தி வருகிறது. தென்னிந்திய உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற இந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவதற்கான இந்த ஒப்பந்தம், உணவகத் துறையில் முக்கியமான முதலீட்டு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.




கருத்துகள் (0)