லக்னோ இளைஞர் தற்கொலை விவகாரம்: வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட 2 பெண் நடனக் கலைஞர்கள் கைது!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, சப்னா ராவத் மற்றும் நேஹா பர்வீன் ஆகிய இரண்டு பெண் நடனக் கலைஞர்களை தாக்கூர் கஞ்ச் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், இரு பெண்களும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பாரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசாரும் அந்தப் பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இளைஞர் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் கவனத்தைப் பெற்றது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு பெண் நடனக் கலைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
இளைஞரின் வீடியோவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் காவல்துறையினரின் தொடர்பு குறித்த புகார்கள் தொடர்பாக விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளன.




கருத்துகள் (0)