வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் ரூ.350 ஆக உயர வேண்டுமா? ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கருத்து!

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் ரூ.350 ஆக உயர வேண்டுமா? ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் கருத்து!

இந்தியாவில் மொபைல் தொலைத்தொடர்பு சேவைக்கான சராசரி மாதக் கட்டணத்தை ஒரு பயனருக்கு ரூ.350 ஆக உயர்த்த வேண்டும் என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கவும், சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கட்டண உயர்வு அவசியம் என்பது அவரது கருத்தாக உள்ளது.

இதற்கு விளக்கமளித்த அவர், பெட்ரோல், மின்சாரம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடு முழுவதும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், 5ஜி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளவும் அதிக வருவாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால், மொபைல் சேவைகளுக்கான சராசரி மாதக் கட்டணம் ரூ.350 என்ற அளவை எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.