வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

அசாமில் லாரி - மினிபஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.. 16 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அசாமில் லாரி - மினிபஸ் நேருக்கு நேர் மோதி விபத்து.. 16 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அசாம் மாநிலம் காசிரங்கா அருகே உள்ள ரோங்காஜன் பகுதியில் லாரியும் மினிபஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போகாகாட்டில் இருந்து நாகாவோன் நோக்கிப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினிபஸ் மீது, எதிர் திசையில் வந்த கன்டெய்னர் லாரி திடீரென மோதியுள்ளது.

இந்த மோதலின் தாக்கத்தில் மினிபஸ் கடுமையாக உருக்குலைந்தது. அதில் பயணம் செய்த பலர் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கோஹோரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.