திருவனந்தபுரத்தில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் பேராசிரியர்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த பூர்ணிமா (45), தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பூஜப்புரா பகுதியில் தனியாக வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை அவர் கல்லூரிக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள், அவரைத் தேடி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சோதனை செய்தபோது, பூர்ணிமா உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
அவர் இறந்து சுமார் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என முதற்கட்டமாகக் கருதப்படுகிறது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)