அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஐரோப்பிய ராணுவத் தளங்களும் குறிவைக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக அருகிலுள்ள ராணுவ நிலைகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் தொலைதூரத் தீவுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான மேஜர் ஜெனரல் மொசென் ரெஜாய் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பதிலடி நடவடிக்கையின் எல்லை விரிவடையும் என்பதே அவரது கருத்தாகும்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. பின்னர் அந்தப் பதற்றம் ஓரளவு தணிந்திருந்த நிலையில், தற்போது ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)