வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
உலகம்

தங்கம் விலையில் அதிரடி சரிவு! சர்வதேச சந்தையில் 104 டாலர் குறைந்தது.. சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வருமா?

தங்கம் விலையில் அதிரடி சரிவு! சர்வதேச சந்தையில் 104 டாலர் குறைந்தது.. சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வருமா?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 104.92 டாலர் சரிந்து 3,887.23 டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இந்த விலை வீழ்ச்சி சுமார் ரூ.9,868.16 ஆகும். அதேபோல், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் 1.74 டாலர் குறைந்து ஒரு அவுன்ஸ் 50.22 டாலராக வர்த்தகமாகிறது.

 

இதற்கிடையே, சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.200 என்ற விலையில் விற்பனையானது.

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்குக் கீழ் குறைய வாய்ப்பு உள்ளதா என்பதை நகை வாங்குவோர் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.