அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - கனிமொழி விளக்கம்!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியது. இந்தச் சந்திப்பில் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் இந்தச் சந்திப்பில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மசோதா அமல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், திமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கனிமொழி விளக்கமளித்தார்.
அதேநேரத்தில், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)