வயல்வெளியில் புல் அறுக்க சென்ற பெண் விஷவண்டு கடித்து உயிரிழப்பு!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி (50), மதுக்கூர் ராமாம்பாள்புரம் பகுதியில் வசித்து வந்தார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வயல்வெளியில் புல் அறுக்க சென்றபோது விஷவண்டு கடித்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும், அதில் பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
விஷவண்டு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)