ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்!

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம மரணம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ராம்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரோஜ் தேவி (50), அவரது மகள் ஷிவாங்கி (25), மகன் லக்கி (27) ஆகியோர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். தாயையும் சகோதரியையும் கொலை செய்துவிட்டு லக்கி தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

லக்கியின் கைபேசியை ஆய்வு செய்தபோது, தற்கொலைக் குறிப்பு போன்ற கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பட்டா பஸ்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மூவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.