அரசியலுக்கு வருவீங்களா? செய்தியாளரின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த ரியாக்ஷன்!

கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை த்ரிஷா விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்கள், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்காமல் புன்னகைத்த த்ரிஷா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
த்ரிஷாவின் இந்த எதிர்வினை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து த்ரிஷா எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, அவரது புன்னகையை அரசியல் வருகைக்கான சம்மதமாகக் கருத முடியாது.




கருத்துகள் (0)