2029 பிரதமரை தீர்மானிப்பது சமூக நீதி கூட்டணிதான்: ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!

திமுகவினரின் செயல்பாடுகளையும் பேச்சுகளையும் கடுமையாக விமர்சித்துள்ள ஆதவ் அர்ஜுனா, அவர்கள் சைத்தான் பிள்ளைகளாக மாறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவினரின் தொடர்ச்சியான பேச்சுகள் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், புதிய அரசியல் முகங்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள சூழலில், யார் எந்தப் பகுதியில் இருந்து அரசியல் களத்திற்கு வந்தாலும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் போட்டிகளைச் சந்திப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை என்பதையும் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிதான் தீர்மானிக்கும் என்று ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அவரது இந்த அரசியல் கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.




கருத்துகள் (0)