வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

அதிமுகவின் புதிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக ச. கல்யாணசுந்தரம் நியமனம்!

அதிமுகவின் புதிய தலைமைச் செய்தித் தொடர்பாளராக ச. கல்யாணசுந்தரம் நியமனம்!

அதிமுகவின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக பேராசிரியர் ச. கல்யாணசுந்தரத்தை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் புதிய பொறுப்பின் மூலம் தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்களில் அதிமுகவின் கருத்துகள், நிலைப்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக எடுத்துரைப்பது அவரது பொறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் புதிய தலைமைச் செய்தித் தொடர்பாளருக்கு தேவையான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.