வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. தவெகவை விமர்சித்த டிடிவி தினகரன்!

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. தவெகவை விமர்சித்த டிடிவி தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவெக அரசை விமர்சித்துள்ள அவர், “தவெகவும் பாலியல் குற்றங்களும்” என்ற தலைப்பில் தனியாக ஒரு புத்தகமே எழுதும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலியல் குற்றச்சம்பவங்களில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் தவெகவினரை பாதுகாக்காமல், எந்தவித பாரபட்சமும் இன்றி அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.