அடுத்த 3 ஆண்டுகளில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏ.ஐ.? ஓபன்ஏஐ நிர்வாகி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக மாறக்கூடும் என்று ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளேயே இதுதொடர்பான குறிப்பிடத்தக்க ஆபத்துகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்படும் தவறுகள் அல்லது அதன் செயல்பாடுகளில் உருவாகும் பாதிப்புகள் மனித உயிரிழப்புகளுக்குக்கூட வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான கவலைகளையும் அவரது கருத்துகள் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளன.




கருத்துகள் (0)