BREAKING: 16 நாட்களாக சரிந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு சவரனுக்கு ரூ.1,080 அதிகரிப்பு!

தமிழகத்தில் கடந்த 16 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று திடீரென உயர்ந்து நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட நாட்களாக விலை சரிவைக் கண்ட தங்கம் இன்று கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து ரூ.11,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.1,080 அதிகரித்து ரூ.92,800 என்ற விலையை எட்டியுள்ளது.
இதற்கிடையில், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.




கருத்துகள் (0)