புதன், அக்டோபர் 14, 2026
உண்மையின் குரல்
அரசியல்

“பாசிசம், பாயாசம் எனப் பேசும் நடிகர் பெயர் இதில் இல்லையே!” – காங்கிரஸைச் சாடிய தயாநிதி மாறன்!

“பாசிசம், பாயாசம் எனப் பேசும் நடிகர் பெயர் இதில் இல்லையே!” – காங்கிரஸைச் சாடிய தயாநிதி மாறன்!

 

 

பாசிசம், பாயாசம் என அரசியல் மேடைகளில் பஞ்ச் வசனங்களைப் பேசும் நடிகரின் பெயர், இந்த விவகாரத்திலும் இடம்பெறவில்லையே என திமுக எம்.பி. தயாநிதி மாறன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார். தமிழக அரசியலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் பேசப்பட்டு வரும் நிலையில், அவரது இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

 

காங்கிரஸை நோக்கிப் பேசிய தயாநிதி மாறன், “பனையூருக்கு வந்து காபி குடிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்; பாசிச எதிர்ப்புக்கெல்லாம் அழைக்காதீர்கள் எனக் கூறிவிட்டாரா? வாக்கு வங்கி இல்லாதவர்கள் என்ற உண்மை டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.