திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கார்த்திகை தீபத்திற்கு 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் சென்னையில் இருந்து மட்டும் 1,713 பேருந்துகள்!

கார்த்திகை தீபத்திற்கு 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் சென்னையில் இருந்து மட்டும் 1,713 பேருந்துகள்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வரை 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

 

திருவண்ணாமலையில் நடைபெறும் மகா தீபத் திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, நவம்பர் 22 முதல் 25-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு மட்டும் மொத்தம் 1,713 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,023 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 400 பேருந்துகளும், அடையாறில் இருந்து 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

 

பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்புப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.