திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
லைஃப்ஸ்டைல்

நாளை இரவு வானில் பிரமாண்டமாக தோன்றும் பீவர் சூப்பர் மூன் வெறும் கண்களால் பார்க்கலாம்!

நாளை இரவு வானில் பிரமாண்டமாக தோன்றும் பீவர் சூப்பர் மூன் வெறும் கண்களால் பார்க்கலாம்!

வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘பீவர் சூப்பர் மூன்’ நாளை இரவு வானில் தோன்ற உள்ளது. வழக்கமான முழு நிலவை விட பெரியதாகவும், அதிக பிரகாசத்துடனும் காட்சியளிக்க உள்ளதால், பொதுமக்களும் இதனை வெறும் கண்களால் ரசிக்கலாம்.

 

நாளை இரவு 8.23 மணிக்கு முழு நிலவு தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நிலவு பூமிக்கு சுமார் 3,60,765 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் வருவதால், சாதாரண முழு நிலவை விட சுமார் 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் தென்படும் என கூறப்படுகிறது.

 

சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் வானத்தை நோக்கிப் பார்த்தால் இந்த சூப்பர் மூனை தெளிவாக ரசிக்க முடியும். இதனைப் பார்க்க தொலைநோக்கி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை.

 

மேலும், டிசம்பர் 24-ம் தேதியும் மற்றொரு சூப்பர் மூன் தோன்ற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து நிகழவுள்ள இந்த வானியல் நிகழ்வுகள் வானியல் ஆர்வலர்களுக்கு சிறப்பான வாய்ப்பாக அமையவுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.