Bisleri குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என FSSAI அறிவிப்பு!

பிரபல குடிநீர் நிறுவனமான Bisleri-யின் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. ஆய்வகப் பரிசோதனைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயனங்கள் அதிகமாக இருந்ததும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டதும் இதற்குக் காரணமாகியுள்ளது.
Bisleri நிறுவனத்தின் தயாரிப்பு மாதிரியை ஆய்வு செய்தபோது, புரோமேட் (Bromate) என்ற வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்ட ஆய்வில் அந்த குடிநீர் மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில், மறுபரிசோதனைக்காக மற்றொரு ஆய்வகத்திற்கு மாதிரி அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்விலும் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ் (PAHs) என்ற வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதால், அந்த மாதிரி மீண்டும் பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டது.
இரு ஆய்வகங்களின் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் Bisleri நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர FSSAI அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.




கருத்துகள் (0)