வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ரூ.78,000 வரை மானியம் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்!

வீடுகளில் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்தி பிஜ்லி யோஜனா திட்டத்தின் கீழ், சோலார் பேனல் அமைக்கும் வீடுகளுக்கு மானியத்துடன் மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை நிறுவும் பயனாளிகளுக்கு, 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதனால் சோலார் அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்ப செலவைக் குறைக்க முடியும்.
வீட்டின் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்றவாறு 1 கிலோவாட் முதல் 3 கிலோவாட் அல்லது அதற்கும் அதிகமான திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்துக் கொள்ளலாம். மின் நுகர்வு மற்றும் தேவைக்கு ஏற்ப அமைப்பின் திறனை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
மேலும், மத்திய அரசின் மானியத்துடன் தமிழக அரசும் கூடுதல் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் வீடுகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ விரும்புவோருக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது, மானிய விவரங்கள் மற்றும் தகுதி நிபந்தனைகள் குறித்து அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmsuryaghar.gov.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.




கருத்துகள் (0)