சாலையின் குறுக்கே பாய்ந்த காட்டுப்பன்றி… நிலைதடுமாறி விழுந்த இருசக்கர வாகன ஓட்டி பலி! சிசிடிவி காட்சி வைரல்!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென காட்டுப்பன்றி வந்ததால் ஏற்பட்ட விபத்தில் 36 வயதுடைய இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்தார். அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜுலா தாலுகாவிற்கு உட்பட்ட மண்டல் கிராமத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரவீன்பாய் ரத்னாபாய் வாலா என்ற 36 வயது நபர், தனது கடைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஒன்று திடீரென ஓடியுள்ளது. இதனால் வாகனத்தைச் சமாளிக்க முடியாமல் அவர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக அவருக்கு உதவ முயன்றுள்ளனர். இருப்பினும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த விபத்து நடைபெற்ற காட்சிகள் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலைகளில் விலங்குகள் திடீரென குறுக்கிடும்போது ஏற்படும் ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
https://twitter.com/nextminutenews7/status/2120473815771942914/video/1




கருத்துகள் (0)