சென்னை கொளத்தூரில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழப்பு – கணவர் மீது சந்தேகம் தெரிவித்து பெற்றோர் சாலை மறியல்!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும், 26 வயதான சங்கீதாவுக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு மாலை அணிவது தொடர்பாக கணவன், மனைவி இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சந்தோஷ் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தூக்கிட்டு உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் நேற்று வியாசர்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கருத்துகள் (0)