வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மேகதாது அணை கட்டியே தீருவோம்; யாராலும் தடுக்க முடியாது – கர்நாடக முதல்வர் திட்டவட்டம்!

மேகதாது அணை கட்டியே தீருவோம்; யாராலும் தடுக்க முடியாது – கர்நாடக முதல்வர் திட்டவட்டம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டும் முயற்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், திட்டமிட்டபடி அணை கட்டப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

 

மைசூருவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பேசிய சிவக்குமார், காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

மேலும், மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக முதல்வரின் இந்தக் கருத்து காவிரி நீர் விவகாரத்தில் மீண்டும் அரசியல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.