வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சென்னையில் நவம்பர் 14-ல் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் – 19 மண்டலங்களில் சிறப்பு ஏற்பாடு!

சென்னையில் நவம்பர் 14-ல் ரேஷன் அட்டை குறைதீர் முகாம் – 19 மண்டலங்களில் சிறப்பு ஏற்பாடு!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது கோரிக்கைகளையும் குறைகளையும் எளிதாகத் தெரிவித்து தீர்வு பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் சிறப்பு குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் நவம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

 

சென்னையில் செயல்பட்டு வரும் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் இந்த முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் உள்ளிட்ட விவரங்களைத் திருத்துதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் மூத்த குடிமக்களுக்கான அங்கீகாரச் சான்று பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

 

குடும்ப அட்டை தொடர்பான தேவைகள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணையும் கொண்டு வருவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.