வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

ஒரு மாதமாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி ஹேமலதா – நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி டிஐஜி!

ஒரு மாதமாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி ஹேமலதா – நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி டிஐஜி!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் 11ஆம் தேதி இரவு சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சிறுமி காணாமல் போய் ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சென்னை சிபிசிஐடி பிரிவு டிஐஜி விக்ரமன் நேற்று ஆலம்பூண்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சம்பவம் தொடர்பாக விரிவான வாக்குமூலங்களைப் பெற்றார்.

 

தொடர்ந்து, சிறுமி வசித்து வந்த வீட்டையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விவரங்களை ஆய்வு செய்த அவர், புதிய கோணங்களிலும் விசாரணையை முன்னெடுத்துச் செல்ல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிறுமியை கண்டுபிடிக்கும் நோக்கில் விசாரணை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.