வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: நெல்லை நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை: நெல்லை நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

நெல்லையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 40 வயதான தனராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

புதுப்பேட்டையைச் சேர்ந்த சந்திரனின் மகன் தனராஜ் மீது, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2025ஆம் ஆண்டு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தனராஜுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.