வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நவம்பர் 19 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நவம்பர் 19 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகப் பகுதிகளில் மழைப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.