சனி, நவம்பர் 28, 2026
உண்மையின் குரல்
சினிமா

சீதையின் தோற்றம் குறித்து விமர்சனம்.. மனம் தளராமல் எதிர்கொள்வேன் என சாய் பல்லவி!

சீதையின் தோற்றம் குறித்து விமர்சனம்.. மனம் தளராமல் எதிர்கொள்வேன் என சாய் பல்லவி!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சீதையாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரது தோற்றம் மற்றும் சீதா கதாபாத்திரத்தில் அவர் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

 

இதுகுறித்து பேசிய சாய் பல்லவி, சீதை எப்படிப்பட்ட அழகுடன் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதை தான் கவனித்து வருவதாக தெரிவித்தார். இதுபோன்ற விமர்சனங்கள் ஒருவரின் மன உறுதியை பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 

மேலும், விமர்சனங்களை எதிர்கொள்ள மனதளவில் வலிமையாக இருக்க வேண்டும் என்றும், தன்னம்பிக்கை இருந்தால் மற்றவர்களின் கருத்துகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும் அல்லது அவற்றை புறக்கணித்துவிட்டு நமது பாதையில் தொடர்ந்து முன்னேறலாம் என்றும் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.