‘கிரீஸ்’, ‘கேட்ஸ்’ நாடகங்களில் நடித்த அமெரிக்க நடிகர் ஸ்டீவன் ஹேக் காலமானார்!

அமெரிக்க திரைப்படம் மற்றும் நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஸ்டீவன் ஹேக் (68) காலமானார். இவர் நவம்பர் 19ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் திடீரென ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவை இன்டராக்ட் தியேட்டர் கம்பெனி உறுதிப்படுத்தியுள்ளது. திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1978ஆம் ஆண்டு வெளியான ‘கிரீஸ்’ திரைப்படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமான ஸ்டீவன் ஹேக், பின்னர் புகழ்பெற்ற பிராட்வே இசை நாடகமான ‘கேட்ஸ்’ (Cats) நிகழ்ச்சியின் ஆரம்பகால நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றார். மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவு அமெரிக்க கலைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)