வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
சினிமா

ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு.. டிசம்பர் 3-ம் தேதி கெனிஷா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு.. டிசம்பர் 3-ம் தேதி கெனிஷா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த சிவில் அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆஜராகத் தவறினால், அன்றைய தினமே வழக்கை முடிக்க நேரிடும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி ரவி சிவில் அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

 

மேலும், இந்த விவகாரத்தால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு இழப்பீடாக ரூ.1.01 கோடி வழங்க வேண்டும் என்றும் ஆர்த்தி ரவி கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி கெனிஷா நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் ஆஜராகாவிட்டால், வழக்கை அன்றே விசாரித்து முடிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.