செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
சினிமா

சர்வதேச எம்மி விழாவில் விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி!

சர்வதேச எம்மி விழாவில் விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி!

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவில் நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கியதன் மூலம், இந்த நிகழ்வில் விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இந்த பிரம்மாண்ட விருது நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா விஜய் சேதுபதியுடன் கலந்துகொண்டார். இருவரும் கருப்பு நிற கோட் சூட் அணிந்து கம்பீரமாக வந்திருந்தனர். அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

 

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்ற விழாவில் விஜய் சேதுபதி இடம்பெற்றிருப்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. அவரது இந்த சர்வதேச அரங்கில் கிடைத்த பெருமை இந்திய சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.