ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ஹைதராபாத் ஜிம் பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹைதராபாத் ஜிம் பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றிய மௌசம் அலி என்பவர், பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி, மிரட்டி பணம் பறித்த வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, சுமார் இரண்டு ஆண்டுகள் அந்தப் பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஜிம் வளாகத்தில் உள்ள கழிவறையில் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், மிரட்டி பணம் பறித்ததாகவும் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மௌசம் அலிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.