ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டிசம்பர் 1-ம் தேதி திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் – அரசு விழாக்களில் பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரம்!

டிசம்பர் 1-ம் தேதி திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் – அரசு விழாக்களில் பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக முதலமைச்சர் விஜய், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் டிசம்பர் 1-ம் தேதி திருச்சி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகையையொட்டி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்சி புத்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நவீன சிகிச்சைப் பிரிவுக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ.134.59 கோடி செலவில் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் 600 படுக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், முடிவடைந்த அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் முதலமைச்சரின் பயணத் திட்டத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா நடைபெறும் இடங்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

முதலமைச்சரின் திருச்சி பயணம் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.