வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு தங்களுக்கு இந்நோய் இருப்பதே தெரியாமல் இருப்பது சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 8.98 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3.86 கோடி பேருக்கு தாங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 

மேலும், நீரிழிவு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதை அறிய முடியும் என்று 75 சதவீதம் பேர் தவறான எண்ணத்தில் இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதனால் எந்தவித அறிகுறிகளும் இல்லாதவர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.

 

அதேபோல், 48 சதவீதம் பேர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய தவறான புரிதல்களும் பரிசோதனையைத் தவிர்க்கும் மனப்பான்மையும் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்குப் பெரும் தடையாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

எனவே, அறிகுறிகள் தென்படும் வரை காத்திருக்காமல் அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வதும், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதும் நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.