வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

இந்தியாவின் முதல் அமிர்த் பாரத் 3.0 ரயில் அறிமுகம்! டெல்லி – பாட்னா இடையே சிறப்பு சேவை!

இந்தியாவின் முதல் அமிர்த் பாரத் 3.0 ரயில் அறிமுகம்! டெல்லி – பாட்னா இடையே சிறப்பு சேவை!

இந்திய ரயில்வேயின் புதிய முயற்சியாக, அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் 'அமிர்த் பாரத் 3.0' ரயில் டெல்லி மற்றும் பாட்னா இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயிலாக இந்த ரயில் சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தம் 22 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ரயிலின் இயக்கத் திறனை மேம்படுத்தும் வகையில் அதிவேக புஷ்-புல் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரத்தைக் குறைப்பதுடன், பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகள், பாதுகாப்பு மற்றும் சிறந்த பயண அனுபவத்தைப் பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ரயில் சேவையின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இதனால் டெல்லி – பாட்னா வழித்தடத்தில் பயணிக்கும் மக்களிடையே இந்த புதிய ரயில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.