கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகார்: தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் ஆர்.எஸ்.பாரதி மனு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், மாவட்ட ஆட்சியரின் அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அரசு அதிகாரியின் கண்ணியத்தைப் பாதிக்கும் விதத்திலும் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)