வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு!

ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அண்மையில் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை எதிர்த்து அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த வாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் முத்துக்குமார் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் சரவணன் என்பவரும் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

 

ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பான இந்த வழக்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.