வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் அதிமுக புகார்!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் அதிமுக புகார்!

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) புகார் மனு அனுப்பியுள்ளார்.

 

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி எம்எல்ஏ தொந்தரவு அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 

இந்நிலையில், டிஜிபிக்கு மட்டுமின்றி தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் திரிசூலி புகார் மனுவை அனுப்பியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.