வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக எம்எல்ஏவை கோமாளிகள் அல்ல, கிரிமினல்கள் என விமர்சித்த மதிவதனி!

தவெக எம்எல்ஏவை கோமாளிகள் அல்ல, கிரிமினல்கள் என விமர்சித்த மதிவதனி!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனியும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், அரசு அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், சாதாரண பெண்களின் பாதுகாப்பு மற்றும் நிலைமை என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், சம்பந்தப்பட்டவர்களை கோமாளிகள் என்று சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும், அவர்கள் கிரிமினல்கள் என்றும் விமர்சித்துள்ளார். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த மதிவதனி, இந்த விவகாரத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.