வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – 5 பேர் கைது!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – 5 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று பலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிபின், மணிகண்டன், சிஜோ, ராபின், கிங்ஸ்லி ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

பின்னர் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.