வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வைகை அணையில் நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! 100 நாட்களுக்கு நீர் விநியோகம்!

வைகை அணையில் நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! 100 நாட்களுக்கு நீர் விநியோகம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக நவம்பர் 14ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளார்.

 

மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெறவுள்ள முதல்போக நெல் சாகுபடிக்குத் தேவையான நீரை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மொத்தம் 100 நாட்களுக்கு தண்ணீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் 30 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். அதன்பிறகு அடுத்த 70 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் முதல்போக சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.