வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நேரு பிறந்தநாள் கேக்கில் முதல்வர் புகைப்படம்! தமிழக அரசை விமர்சித்த அப்பாவு!

நேரு பிறந்தநாள் கேக்கில் முதல்வர் புகைப்படம்! தமிழக அரசை விமர்சித்த அப்பாவு!

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்குகளில் நேருவின் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுதொடர்பாக முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தமிழக அரசை விமர்சித்துள்ளார். நேருவின் பிறந்தநாளுக்காக வழங்கப்பட்ட கேக்குகளில் அவரது புகைப்படத்தை அச்சிடுவதற்குப் பதிலாக, முதல்வரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

மேலும், அரசின் நிகழ்ச்சியிலும் முதல்வரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்வது சுய விளம்பர முயற்சி என விமர்சித்த அப்பாவு, "ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸ்டிக்கர் ஒட்டலாமா CM சார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.