வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காதல் விவகாரத்தில் சகோதரி உயிரிழப்பு: மீரானை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய நந்தகுமார் கைது!

காதல் விவகாரத்தில் சகோதரி உயிரிழப்பு: மீரானை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய நந்தகுமார் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் பகுதியில் பட்டப்பகலில் ஒருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணமான மீரான் என்பவர், வேறொரு பெண்ணைக் காதலித்து அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் பிரித்துள்ளனர். இந்தச் சூழலில் அந்தப் பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகோதரியின் மரணத்திற்கு மீரான்தான் காரணம் எனக் கருதிய நந்தகுமார், அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே கோளிவாக்கம் பகுதியில் பட்டப்பகலில் மீரானை அரிவாளால் வெட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மீரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நந்தகுமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.