வெள்ளி, நவம்பர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தூத்துக்குடியில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – 3 இளைஞர்கள் கைது!

தூத்துக்குடியில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – 3 இளைஞர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியில் அரிவாளுடன் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கையில் அரிவாளை வைத்துக்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையில் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீடியோவில் இடம்பெற்றிருந்த முகிலன் (19), பெரியசாமி என்ற விக்கி (19), சதீஷ்குமார் (19) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.