கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.5,000 அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.30,000-லிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊதிய உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,741 கலை அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 319 பொறியியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 9,060 பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)